திமுக எம்பி கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு நாளை தனது வெளிநாடு பயணத்தை தொடர்கிறது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 8 எம்பிக்கள் குழு நாளை காலை ரஷ்யா புறப்படுகிறது. நாளை மறுநாள் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்கிறது குழு. ரஷ்யாவை தொடர்ந்து ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியாவுக்கு செல்கிறது கனிமொழி தலைமையிலான குழு. தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து வெளிநாடுகளிடம் குழு விளக்கம் அளிக்கிறது.