நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதில் நிலக்கோட்டையை சேர்ந்த நிர்வாகிகள் இருவர், திமுகவை விமர்சித்து அவதூறான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதுகுறித்து திமுகவினர், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், வத்தலக்குண்டு காவல் நிலையங்களில் தவெக நிர்வாகிகள் மீது புகார் அளித்தனர். இதன்பேரில் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து அவதூறு போஸ்டர் ஒட்டியதாக நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (43) என்பவரை கைது செய்தனர். மேலும் காமாட்சிபுரத்தை சேர்ந்த ராமரை தேடி வருகின்றனர்
அவதூறு போஸ்டர் ; தவெக நிர்வாகி கைது
0