சுல்தான்பூர்: உபியில் கடந்த 2018ம் ஆண்டு உள்ளூர் பாஜ பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்தார். அப்போதைய பாஜ தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு எம்பி-எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் உ.பி. நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்
27