டெல்லி: அவதூறு வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு ஜூலை 21-ல் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ராகுல் வழக்கை அவசர வழக்காக எடுக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறையிட்டார். மோடி பெயரில் உள்ளவர்கள் பற்றி விமர்சித்ததற்காக அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் கோர்ட் 2 ஆண்டு சிறை வழங்கியது.