சென்னை: அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016-ல் பைனான்ஸ்சியர் முகிந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.