நீலகிரி: கோத்தகிரி அருகே மான் இறைச்சியை பறிமுதல் செய்து 15 பேரை கைது செய்தது போலீஸ். 2 நாட்கள் முன் இருசக்கர வாகனத்தில் மான் இறைச்சி கொண்டு சென்ற பொம்மன் கைது செய்யப்பட்டார். பொம்மனிடம் நடந்த விசாரணை அடிப்படையில் தற்போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோத்தகிரி அருகே இறைச்சிக்காக மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவது விசாரணையில் தெரியவந்தது.