டெல்லி: Deep Fake Video விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நவ.24ல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் நடிகை ரஷ்மிகா முகம் போல் சித்தரித்து வீடியோ வெளியானது சர்ச்சையாகியிருந்தது. செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்து பிரதமர் அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தார்.