டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது. நாளை பிற்பகல் வட தமிழ்நாடு – புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வலுவிழந்து கரையை கடக்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது புயலாகவே கரையை கடக்கும் என அறிவித்துள்ளது. கரையை கடக்கும் சமயத்தில் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இடையிடையே 90 கி.மீ. சூறைக்காற்று வீசக்கூடும்