அரபிக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும், அதற்கடுத்து 22-ம் தேதி தீவிர புயலாக வலுக்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு தேஜ் என இந்தியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும். இந்தாண்டு ஏற்கனவே மே மாதம் வங்கக்கடலில் மோக்கா புயலும், ஜூனில் அரபிக் கடலில் பிபோர்ஜாய் புயலும் உருவானது.