சென்னை: இறந்துபோன நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது இயலாதது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. இறந்துபோன மர்ம நபரின் அடையாளத்தை கண்டறிய அவரின் கைரேகை மூலம் விவரங்களை தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் UIDAI அமைப்புக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்தது. ஒன்றிய அரசின் பதில் மனுவை அடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இறந்துபோன நபரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட இயலாது: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு பதில்
0