தஞ்சை: செங்கிப்பட்டி பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அரசு பேருந்தும் டெம்போ வேனும் நேற்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.