ராமநாதபுரம்: நிர்வாக ரீதியிலான பிரச்னையில் பரமக்குடி பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வி.ஏ.ஓ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தார் சாந்தி மற்றும் அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியர்களை வி.ஏ.ஓ. யூனுஸ் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.