அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் மூலம் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல். ஜூலை 30ல் குண்டு வெடிப்பு நடத்தி எஸ்.பி.வேலுமணியை கொலை செய்ய உள்ளதாக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. கொலை மிரட்டலை அடுத்து கோவை காவல் ஆணையரிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.