அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் மாவட்டத்தில் குருங் ஆற்றின் மேல் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிக்கிய 26 தொழிலாளர்களும் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களில் 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன ஒருவரது சடலம் தேடப்பட்டு வருகிறது.