திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு(53). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 2வது மகள் லோகேஸ்வரி(24) என்பவர் அரண்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 7 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை ஏடிஎமில் பணம் எடுப்பதற்காக விடையூர் கிராமத்திலிருந்து திருவள்ளூருக்கு செல்வதாக கூறிவிட்டு லோகேஸ்வரி சென்றுள்ளார்.
ஆனால் இரவு ஆகியும் வீடு திரும்பாததால் லோகேஸ்வரியின் தந்தை பாபு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்திலும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் திருவள்ளூர் தாலுகா போலீசில் தந்தை பாபு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோகேஸ்வரியை தேடி வருகின்றனர்.