திருவள்ளூர்: திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(58). இவர் தனது மகள் ராதிகா(34) என்பவரை அதே பூங்காநகர் குண்டுமல்லி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்ப்பதற்காக தனது மாருது சுசுகி எக்கோ காரில் 17ம் தேதி இரவு 8 மணியளவில் சென்று வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்க கார் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்து கிடைக்காததால் திருவள்ளூர் தாலுகா போலீசில் முருகேசன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.