திருமலை: தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் டி.எஸ்.ஆர். ஜெண்டல் தாண்டாவை சேர்ந்தவர் தாராவத்கிஷன்(42). இவரது மனைவி காவ்யா. இவர்களது மகள்கள் ரம்யா, பல்லவி. இதில் பல்லவி அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த பூக்யா சுரேஷ் என்பவரை காதலித்துள்ளார். இதையறிந்த தாராவத்கிஷன், பல்லவியை கண்டித்துள்ளார்.
இதனால் பல்லவி, தனது தாய் காவ்யா, காதலன் சுரேஷ் மற்றும் அக்கா ரம்யா , சுரேஷின் நண்பர்கள் சந்து மற்றும் தேவேந்தர் ஆகியோரையும் சேர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் தாராவத்கிஷனின் கை, கால்களை கட்டி போட்டு கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலியானார். இதுகுறித்து தாராவத்கிஷனின் தாய் சங்கி மஹபூபாபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவ்யா, மகள்கள் ரம்யா, பல்லவி, சுரேஷ், சந்து தேவேந்தர் ஆகிய 6 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.