பாகிஸ்தான் அணியுடன் ராவல்பிண்டியில் நடக்கும் 2வது டெஸ்டில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 262 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணி 11.3 ஓவரில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில், லிட்டன் தாஸ் – மெஹிதி ஹசன் மிராஸ் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்தனர்.
தாஸ் 138 ரன் (228 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்), மிராஸ் 78 ரன் (124 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். ஹசன் மகமூத் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் குர்ரம் ஷாஷத் 6 விக்கெட், மிர் ஹம்சா, சல்மான் ஆஹா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 12 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்துள்ளது.