சென்னை: கொச்சியில் கப்பல் விபத்தால் தமிழக கடலோரங்களில் ஆபத்தான பொருட்கள் கரை ஒதுங்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொச்சி அருகே சரக்கு கப்பல் மூழ்கியதால் கண்டெய்னர்களில் இருந்து ரசாயன பொருட்கள் கரை ஒதுங்கின. கேரள கடலோரங்களில் ரசாயன பொருட்கள் கரை ஒதுங்கியதை அடுத்து தமிழக கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியின் மேற்கு கடற்கரையில் பிளாஸ்டிக் துகள்கள், பிற பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் துகள்களை அகற்ற சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆபத்தான பொருட்கள் கரை ஒதுங்கவில்லை: தமிழ்நாடு அரசு
0