மானாமதுரை : மானாமதுரை குலாலர் தெருவில் நூறாண்டுகளுக்கு மேலாக மண்பாண்ட தொழிலில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்ேபாது நவராத்திரிக்காக ெகாலு பொம்மைகள் தயார் செய்து வருகின்கின்றனர். இது தவிர கோயில்களுக்காக மண்ணால் ஆன கலயங்கள், மண்பானைகள், அடுப்புகள் உள்ளிட்டவைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு ேமலாக மழை பெய்யாமல் வெப்ப காற்று அனலாக வீசி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டன. இரவு ஏழு மணிக்கு மேல் தூறலாக ஆரம்பித்த மழை பத்து மணிக்கு கனமழையாக பெய்யத் துவங்கியது.
கனமழை காரணமாக தெருக்களில் மழைநீர் புரண்டு ஓடியது. வெப்பம் தணிந்த நிலையில் குலாலர் தெருவில் மண்பாண்ட தயாரிப்புக் கூடத்தை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இந்த இடத்தில் மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய பயன்படும் செம்மண், கரம்பை மண், சவுடுமண், களிமண் ஆகியவைகளை தொழிலாளர்கள் சேமித்து வைத்திருந்தனர்.
கன மழையால் இந்த மண்ணில் தண்ணீர் குளம் தேங்கியதால் இந்த மண்ணை எடுத்து மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.