புதுடெல்லி: தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்த மதத்துறவி தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில், “புத்த மதத்துறவி தலாய் லாமாவின் 90வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் 140 கோடி இந்தியர்களுடன் நானும் இணைகிறேன்.
அவர் அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக திகழ்கிறார். அவருடைய செய்தி அனைத்து நம்பிக்கைகளிலும் மரியாதை மற்றும் போற்றுதலை தூண்டி உள்ளது. அவருடைய நல்ல ஆரோக்கியத்துக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.