சென்னை: தமிழ்நாட்டில் டாபர் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. தென் இந்தியாவில் முதல்முறையாக டாபர் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்கிறது. திண்டிவனம் சிப்காட் உணவு தொழில் பூங்காவில் டாபர் தொழிற்சாலை அமைய உள்ளது. டாபர் தொழிற்சாலை மூலம் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.