சென்னை: சிலிண்டர் விலை குறைப்பு என்பது நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில், வீட்டு உபயோ சமையல் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரூ.200 குறைத்தாலும் சிலிண்டர் விலை ரூ.800 வரை உயர்ந்துதான் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்னர்.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களவை தேர்தல் வருவதற்கான அறிகுறியே சிலிண்டர் விலை குறைப்பு. பெட்ரோல்,டீசல் விலையும் குறைக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை. இந்தியா கூட்டணி கட்சிகள் எண்ணிக்கை இன்னும் உயரும்” என்றார்.