Wednesday, February 28, 2024
Home » புயல், மழை நிவாரணம் போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசே பார்த்துக்கொள்ளும் : உச்சநீதிமன்றம்

புயல், மழை நிவாரணம் போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசே பார்த்துக்கொள்ளும் : உச்சநீதிமன்றம்

by Porselvi

டெல்லி : வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பான வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில், நிவாரணத் தொகையாக 8 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இடைக்கால நிவாரணத் தொகையாக மூவாயிரம் கோடி ரூபாயை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பொது நல மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது. வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பான வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும்?. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. நிர்வாகம் சம்பந்தப்பட்டது என்பதால் புயல், மழை நிவாரணம் போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசே பார்த்துக்கொள்ளும். தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்ததால் அவர்கள் முறையிடுவார்கள். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம், “இவ்வாறு தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

eighteen − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi