டெல்லி: புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து கோரிக்கை மனுவை வழங்குவோம். தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ஒன்றிய அரசு நிவாரணம் அளிக்கும் என நம்புகிறோம். பேரிடர் காலங்களுக்கு சாக்கு போக்கு கூறாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement


