புதுடெல்லி: சைபர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய சைபர்கிரைம் தகவல் இணையதளம் (என்சிஆர்பி) செயல்படுகிறது. இதில் ஆன்லைன் மூலமாக பல்வேறு சைபர் குற்றங்களுக்கான புகார்களை தெரிவிக்க முடியும். இந்நிலையில், இந்த இணையதளம் மூலம் நிதி தொடர்பான சைபர் குற்றங்கள் குறித்து புகாரளித்தார் உடனுக்குடன் எப்ஐஆர் பதிவு செய்யக் கூடிய வகையில் இ-ஜீரோ எப்ஐஆர் பதிவு முறையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிமுகப்படுத்தினார். இது சோதனை அடிப்படையில் டெல்லியில் முதலில் அமல்படுத்தப்பட்டு பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். நிதி சைபர் குற்றங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்வதன் மூலம் குற்றவாளிகளுக்கு எதிராக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட நிதி சைபர் மோசடி வழக்குகள் இத்திட்டத்தின் கீழ் வரும்.
சைபர் குற்றவாளிகளை பிடிக்க இ-ஜீரோ எப்ஐஆர்: டெல்லியில் சோதனை
0