டெல்லி: சைபர் கிரைம் மோசடியால் வெளிநாட்டில் சிக்கியிருந்த 16 தமிழர்கள் உள்பட 47 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். வெளிநாட்டில் வேலை எனக்கூறி பட்டதாரிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து அடிமைகளாக சிக்க வைக்கப்பட்டிருந்தனர். தாய்லாந்து, மியான்மர், லாவோஸில் உள்ள சீன நிறுவனங்களில் 5,000 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகவர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக மீட்கப்பட்ட 16 தமிழர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு வருகிறது. டேட்டிங் செயலி மூலம் பெண்களைப்போல் பேசி இந்தியர்களிடம் வெளிநாட்டு கும்பல் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது. தாய்லாந்தில் இருந்து இதுவரை 601 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.