திண்டிவனம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2006ல் திண்டிவனத்தில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றதாக பாமகவைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சி.வி.சண்முகம் காருக்கு அடியில் சென்று தப்பிய நிலையில் அவரது உறவினர் முருகானந்தம் கொல்லப்பட்டார். ஐகோர்ட் உத்தரவுப்படி 2011ல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு 2014ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 5 பேர் இறந்த நிலையில் மீதமுள்ள 15 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஏப்.28ம் தேதி வழக்கு விசாரணை முடிந்த நிலையில் திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு: 15 பேர் விடுதலை
0