சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான இரு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரிலும், திமுக பிரமுகர் அளித்த புகாரிலும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், கொரோனா விதிகளை மீறியதாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விச்சாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், போராட்டம் நடந்த காலத்தில் கொரோனா விதிகள் அமலில் இல்லாத போது, அந்த விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே, மனுதாரர் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.