விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை செப்டம்பர். 2-ம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. அவதூறு வழக்கில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சி.வி.சண்முகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோலியனூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி. சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது.