சென்னை: காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். காலாவதியான 4 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.