சென்னை: தமிழ்நாடு முழுவதும் செப்.1 முதல் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் வாகனங்களின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை உயர்த்தப்பட்டது. சுங்கக் கட்டண உயர்வு மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கொடும் தாக்குதல்களை ஒன்றிய அரசு தொடுத்துள்ளது என சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.