சென்னை: சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வு துறை முதன்மை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை சுங்கத்துறையில் உள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் 7 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.