சென்னை: நடப்பு பருவத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43% குறைவாக பெய்துள்ளது என்று இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். 123 ஆண்டுகளில் 9-வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் மாதத்தில், வழக்கத்தை விட குறைவான மழை பெய்துள்ளது. இவ்வாண்டில் இதுவரை 171 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 98 மி.மீ. மழை பெய்துள்ளது.