தேவையானவை:
புளி – எலுமிச்சையளவு,
பெருங்காயம் – ½ ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்,
உப்பு – திட்டமாக.
அரைக்க:
துவரம்பருப்பு – ½ ஸ்பூன்,
சீரகம் – 1 ஸ்பூன்,
மிளகு – ½ ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்,
காய்ந்த மிளகாய் – 1.
தாளிக்க:
நெய் – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்.
செய்முறை:
புளியைக் கரைத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புளி கொதித்து பச்சை வாசனை போனதும், அரைக்க கொடுத்தவற்றை கொரகொரப்பாக அரைத்து மேலும் தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்து நுரைத்து வர விட்டு இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்துப் போடவும். இதுவே சீரக ரசம். நமது உடலை சீராக வைக்கும்.