கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வெறிநாய் கடித்து 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 நகராட்சி, 1 மாநகராட்சி 683 ஊராட்சி பகுதிகள் உள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் வெறிநாய் நாய் கூட்டம் அதிகமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. தொடர்ந்து இதுப்போல் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் அதிகமாக நாய்கள் சுற்று திரிவதால் குழந்தைகளை வெளியே அனுப்பமுடியவில்லை என்று குற்றச்சாட்டும் எழுத்து வருகின்றது.
இந்நிலையில் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி ஒரு வெறிநாய் தொடர்ந்து பொதுமக்கள் யார் சென்றாலும் கடித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் சிலரை கடித்துள்ளது, இன்று 10க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்த காரணத்தினால் அவர்கள் கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்கள்.
குறிப்பாக 7 வயது சிறுவனை மிக கொடூரமாக கடித்ததற்கு காரணம் பெரியவர்களாக இருந்தால் நாய்யை துரத்தி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றுருப்பார்கள், 7 வயது சிறுவனால் அங்கு இருந்து தப்ப முடியாமல் அந்த நாய் கடிதத்தில் கொடூரமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரை தற்போது மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து இதுபோல் மாவட்டம் முழுவதும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதும் பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகின்றனர். ஏற்கனவே மாநகராட்சி, நகராட்சி நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் ஆனால் தற்போது அது செய்யப்படாத காரணத்தினால் இதுபோல் ஒரு கொடூரமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.