கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்த டிஜிபி உத்தரவு அளித்துள்ளார். குற்றவாளிகள் தங்களது வீடுகளில் ஆயுதங்களை பதுக்கி வைத்து கொலை உள்ளிட்ட சம்பவங்களால் ஈடுபவதாக புகார் எழுந்துள்ளது. கடலூர் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதியில் 40 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.