கடலூர்: கடலூர் தைக்கால் தோணித்துறையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர். கடல் சீற்றம் காரணமாக தினேஷ் என்பவரின் படகு தண்ணீரில் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் மணிக்கண்ணன், தமிழ்வாணன், சாமிதுரை, மணிமாறன், தினேஷ், சற்குணன் ஆகியோர் நீரில் மூழ்கினர். படகு விபத்துக்குள்ளானதை அடுத்து 6 பேரும் உடனடியாக அருகில் இருந்த தமிழ்வாணன் படகில் ஏறி தப்பினர். 6 பேரும் அருகில் உள்ள சிப்காட் தொழிற்சாலையின் தற்காலிக கப்பல் இறங்குதளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக கப்பல் இறங்குதளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 பேரையும் மீட்பதற்கு படகு சென்றுள்ளது.
கடலூர் தைக்கால் தோணித்துறையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மீனவர்கள் மீட்பு
0