கடலூர்: கடலூர் அருகே காராமணி குப்பத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐடி ஊழியரான சுதன்குமார் , அவரது தாய், 10 வயது மகன் ஆகிய 3 பேரின் உடல்களும் வீட்டின் ஒவ்வொரு அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல்கள் கருகிய நிலையில் உள்ளதால் கொலை செய்யப்பட்டு சடலங்களுக்கு தீவைக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுதன் குமாரும் அவரது மனைவியும் ஐதராபாத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நிலையில் சுதன்குமார் சொந்த ஊருக்கு சில நாட்களுக்கு முன் வந்ததாக கூறப்படுகிறது.
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை
150