கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நிலத்தை அளவீடு செய்ய வந்த சர்வேயரை அதிமுக முன்னாள் கவுன்சிலர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சின்ன பெருந்தினி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், சீத்தாப்பதி இவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர்களுக்கிடையே நில தகராறு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மணிகண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நிலத்தை அளவீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை பாதுகாப்போடு சம்மந்தப்பட்ட இடத்தை அளப்பதற்காக சர்வேயர் காவல்துறையில் பாதுகாப்பு வேண்டி மனு அளித்துள்ளார். காவல்துறை, சின்னபெருந்தினி கிராமத்தில் கிராமநிர்வாக அதிகாரி மற்றும் அந்த பகுதி சர்வேயர் மகேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சம்மந்தப்பட்டவர்கள் நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.
அங்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் சீதாபதி மற்றும் அவருடைய மனைவி, மைத்துனர் மற்றும் ஆதரவாளர்கள் நிலத்தை அளக்கக் வரக்கூடாது என்று அலுவலர்களை மிரட்டி தகாத வார்த்தையில் பேசியுள்ளார். அதற்கு நிலவீட்டாளர் முறைப்படி நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல்துறையோடு, வட்டாட்சியர் உத்தரவுபடி நிலத்தை அளக்க வந்திருப்பதாகவும் நீங்கள் முறைப்படி அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் சீதாபதி தகாத வார்த்தைகளால் சர்வேயரை திட்டி அவரை செருப்பால் அடித்துள்ளார். இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோ கடலூர் மாவட்டத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து காவல் துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். மேலும் இது சம்மந்தமாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் சர்வேயர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.