
புதுடெல்லி: கிரிப்டோ கரன்சி,டிஜிட்டல் கரன்சிகள் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது என ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில்,கிரிப்டோ கரன்சிகள்,டிஜிட்டல் கரன்சிகள் போன்றவற்றை கிரிமினல் குற்றங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பண மோசடிகளில் இந்த வகை கரன்சிகளுக்கு சம்மந்தம் உள்ளது. இதுபோன்ற பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றார்.