சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை ஆயிரக்கணக்கானோர் கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். கிரிப்டோ முதலீடுகளில் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதாக கூறிய கும்பல் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளது. இந்த திட்டத்தில் மற்றவர்களை சேர்க்கவும் முதலீட்டாளர்கள் தூண்டப்பட்டுள்ளனர். சட்டமன்ற கூட்டத்தில் சுயேட்சை எம்எல்ஏ ஹோஷ்குமார் சிங் இந்த விவகாரத்தை எழுப்பினார். இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு கிரிப்டோ மோசடி குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் ரூ.200 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி
105