புதுடெல்லி: சிஆர்பிஎப் இயக்குனர் அனிஷ்தயாள் சிங்கிற்கு போதைப்பொருள் கட்டுப்பாடு பணிகள் துறை இயக்குனர் பொறு ப்பை கூடுதலாக ஒன்றிய அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாட்டின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனராக இருந்த எஸ்.என்.பிரதான் கடந்த வாரம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (என்.சி.பி.) தலைவராக, சி.ஆர்.பி.எப் இயக்குனர் அனிஷ் தயாள் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1988ம் ஆண்டு மணிப்பூர் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அனிஷ்தயாள் சிங், போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய இயக்குனர் நியமிக்கும் வரையில் பணியில் இருப்பார். அவர் டிசம்பர் 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.