ஆவடி:சென்னை சாலிகிராமம் எம்ஜிஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(39). மணலி சாத்தாங்காட்டில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஆண்டு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் வேலை செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் சென்னை கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்த சதீஷ்(எ) சதீஷ்குமார்(22) கூடுவாஞ்சேரி கரியாம்பேடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் ஆகியோர் நரசிம்மன் என்பவருடன் சேர்ந்து கம்பெனிகளில் இரும்பு ராடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.2.32 கோடி மதிப்பிலான இரும்பு ராடுகள் மற்றும் எம்.எஸ்.பைப்ஸ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றனர்.ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றினர். பணம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் நரசிம்மன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார் ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ரூ.2.32 கோடி மோசடியில் இருவர் சிறையிலடைப்பு
0