வேப்பிலை, ஆடாதொடா, எருக்கு, நொச்சி, தும்பை, ஆமணக்கு, நித்யகல்யாணி இவற்றில் தலா ஒரு கிலோ எடுத்து துண்டு துண்டாக நறுக்கி 5 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து வடிகட்டினால் மூலிகை பூச்சிவிரட்டி தயார்.
இஞ்சி-பூண்டுக் கரைசல்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றில் தலா அரைகிலோ அளவு எடுத்து, அவற்றை உரலில் இடித்து 5 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் 5 நாள்கள் வரை ஊற வைத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டுக் கரைசல் தயார்.
ஊட்டச்சத்து நிறைந்த முட்டை அமிலம்
தேவையான பொருட்கள்: 5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் வெல்லம்.
தயாரிப்பு:
முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும்.
பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும். பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும்.
அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும்.
கரைசல் தெளித்தலுக்கு தயாராகி விடும்.
இது மீன் அமிலத்தைப் போன்று தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மற்றும் தாவர வளர்ச்சியை அதிகரிக்கும்.
பயன்பாடு: ஒன்று முதல் இரண்டு மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கலாம்.
தேமோர் கரைசல்
தேமோர் கரைசல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும். இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைப் பயிர் வளர்ச்சி ஊக்கியாகத்தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இது வைரஸ் கிருமிகளால் வருகின்ற நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
5 லிட்டர் புளித்த மோர், 5 லிட்டர் தேங்காய் பால் ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் ஊற்றி, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் பத்து லிட்டர் தண்ணீரில் 500 மில்லி தேமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.