*மாவட்ட அதிகாரிகள் ஆய்வு
சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டாரம் காட்டுவண்ணஞ்சூர் கிராமத்தில் மாவட்ட அளவிலான மணிலா பயிர் மகசூல் போட்டி நடைபெற்றது. இந்த பயிர் அறுவடை பரிசோதனையை வேளாண்மை துணை இயக்குனர் அன்பழகன் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொன்ராசு, சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது சங்கராபுரம் வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர்கள் துரை, சிவசங்கர் மற்றும் அட்மா திட்ட அலுவலர் அருண், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் வல்லரசு, விவசாயிகள் நடுவர் குழு விவசாயி கணேஷ், குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
22. சின்னமனூர் அருகே ரூ.2 லட்சத்தில் நடைபெற்று வந்த கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நிறைவு
சின்னமனூர், ஜன. 27:சின்னமனூர் அருகே ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுப்பட்டுள்ள கன்னிசேவைபட்டி கிராம ஊராட்சியில் சுமார் 8000 பேர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் வீடுகளில் இருந்தும் வணிக வளாகங்களிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் சாக்கடை வழியாக ஊரின் நுழைவாயில் உள்ள கன்னிசேர்வைபட்டி குளத்தில் சென்றடைகிறது.
இந்த கழிவுநீர் அப்படியே குளத்தில் சென்றடையும் போது, பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கழிவுகள் என பலவும் அதில் சென்று சேருவதால் மாசடைகிறது.
மேலும் அந்தக் கழிவு நீரிலிருந்து கொசுக்கள், ஈக்கள், புழுக்கள் என உற்பத்தியாகி பல் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கழிவுநீரை சுத்திகரித்து குளத்திற்குள் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னிசேர்வைபட்டி கிராம ஊராட்சியில் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் மெகா தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்தத் தொட்டியில் சரளை கற்களை கொட்டி கடக்கின்ற கழிவுநீர் அனைத்தும் சுத்தமாகி குளத்திற்குள் கலக்கிறது. இதன் காரணமாக குளம் மாசவடைவது தடுக்கப்படும். கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.


