சென்னை: திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில், கடந்த 5ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த 6ம் தேதி சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது.
இதை தொடர்ந்து அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பாஜ அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் எனது தலைமையில் சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில், சட்டத்துறை துணைச் செயலாளர் கே.சந்துரு வரவேற்புரையாற்ற, “புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்; ஏன் மக்களுக்கு எதிரானவை?“ என்ற தலைப்பில் 20ம் தேதி (நாளை) மாலை 5.30 மணியளவில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் கருத்தரங்கம் நடைபெறும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கருத்தரங்கத்தில் சட்டத்துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ, என்.மணிராஜ், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன், பி.ஆர்.அருள்மொழி, இரா.தாமரைச்செல்வன் சட்டத்துறை துணைச் செயலாளர்கள் ஜெ.பச்சையப்பன், வி.வைத்தியலிங்கம், எஸ்.தினேஷ், தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ப.கணேசன், சூர்யாவெற்றிகொண்டான், கே.ஜே.சரவணன், வீ.கவிகணேசன், ஏ.என்.லிவிஸ்ஸ்டன், கே.மறைமலை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களான துரை.கண்ணன், ஜெ.காணிக்கைநாதன், ஜே.லட்சுமிகாந்தன், வே.தேவேந்திரன், சி.கணேஷ் பாண்டியன், தரமணி ஜெகதீசன், எஸ்.கோபி, பெ.வினோத், பி.கே.நாகராஜ், என்.கனகராஜ், பி.எஸ்.ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கின்றனர். சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் நன்றி கூறுகிறார். கருத்தரங்கில் ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.