Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த 14 நாட்களில் குற்றங்களில் ஈடுபட்டதாக சென்னையில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது: பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லையில் கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ெசய்து வருகின்றனர்.  அந்த வகையில், கடந்த 8ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக மாங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் கிரண்(31), அரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த அசோக்குமார்(34), கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன்(எ)மணி(34), மடிபாக்கம் பகுதியை சேர்ந்த மகேஷ்(44).

ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தாக அருண்(38) மற்றும் ஆர்.கே.நகர் காவல் எல்லையில் தர்மா என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர் குமார்(25), தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜெகன்(எ)ஜெகன்னாத் யாதவ்(24), தமிழ்(எ)தமிழ்செல்வன்(23), பாலாஜி(23), வளசரவாக்கம் பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய போரூர் காரம்பாக்கத்தை சேர்ந்த முருகன்(21), புழல் பகுதியில் திருடியதாக கொட்டிவாக்கத்தை சேர்ந்த ரமேஷ்(32) ஆகிய 11 பேரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.