சென்னை: குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பு தருவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அரசு செலவில் பாதுகாப்பு தரக் கோரி ஸ்டாலின் பாரதி என்பவர் மனு தாக்கல் செய்தார். வழக்கு, ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் பாரதியின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பா?: ஐகோர்ட்
previous post