புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா. இவரது மனைவி ரிவாபா. 2019ல் ஜடேஜா மனைவி பாஜவில் சேர்ந்தார். 2022ல் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ வேட்பாளராக போட்டியிட்டுவெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கியதாக ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.